Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.127 சீகாழி - திருஏகபாதம்

திருஞானசம்பந்தர்

1.127

சீகாழி - திருஏகபாதம் பண் - வியாழக்குறிஞ்சி

1370

பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

1371

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

1372

புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

1373

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

1374

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

1375

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.

1376

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

1377

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

1378

தசமுக னெறிதர வூன்று சண்பையான் தசமுக னெறிதர வூன்று சண்பையான் தசமுக னெறிதர வூன்று சண்பையான் தசமுக னெறிதர வூன்று சண்பையான்.

1379

காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே.

1380

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.

1381

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.