Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.117 சீகாழி - திருமாலைமாற்று

திருஞானசம்பந்தர்

3.117

சீகாழி - திருமாலைமாற்று பண் - கௌசிகம்

1257

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

1258

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

1259

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

1260

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

1261

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

1262

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

1263

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.

1264

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

1265

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

1266

வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

1267

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.