திருக்கழுமலம் - திருவிருத்தம்
‹ Thevaram4.83 800
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற் கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம் மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.