திருவையாறு - திருவிருத்தம்
‹ Thevaram4.99 954 955
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.99 திருவையாறு - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென் புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி நாடகக் கால்நங்கை முன்செங்கண் ஏனத்தின் பின்னடந்த காடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால் ஆடகக் காலரி மான்றேர் வலவன்ஐ யாற்றனவே.