Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.50 திருக்குறுக்கை - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.50

திருக்குறுக்கை - திருநேரிசை

486

நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள அடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந் துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக் கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

487

ஆத்தமாம் அயனு மாலும் அன்றிமற் றொழிந்த தேவர் சோத்தமெம் பெருமான் என்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத் தீர்த்தமாம் அட்ட மிமுன் சீருடை ஏழு நாளுங் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே. இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.